எதிர்த்திடுவோம் நாம் எதிர்த்திடுவோம்
edhirthiduvom naam edhirthiduvom
எதிர்த்திடுவோம் நாம் எதிர்த்திடுவோம் சாத்தானின் சக்திகளை ஓடிப்போகும் நம்மை விட்டுப்போகும் வேதத்தின் வசனத்தினால்
தகரட்டும் சத்ருவின் கோட்டைகள் உயரட்டும் இயேசுவின் ஜெயக்கொடி வசனமாம் வாளெடுத்து எதிர்த்து நில் இயேசுவின் நாமத்தினால்
1. பாவத்தினால் வியாதியினால் பயமூட்டும் ஆவிகளை இயேசுவின் நாமத்தில் எதிர்த்து நின்றால் உன்னையே விட்டுப்போகும் 2. மாம்சத்தினால் இச்சையினால் உனைதூண்டும் ஆவிகளை இயேசுவின் நாமத்தில் எதிர்த்து நின்றால் உன்னையே விட்டுப்போகும்
3. கோபத்தினை மூர்க்கத்தினை உன்னில் தூண்டும் ஆவிகளை இயேசுவின் நாமத்தில் எதிர்த்து நின்றால் உன்னையே விட்டுப்போகும்
4. என் தேசத்தில் இயேசுவினை புறக்கணிக்கும் சக்திகளை இயேசுவின் நாமத்தில் எதிர்த்து நின்றால் தேசத்தை விட்டுப்போகும்
5. பாரதத்தில் நற்செய்தியை தடை செய்யும் சக்திகளை இயேசுவின் நாமத்தில் எதிர்த்து நின்றால் தேசத்தை விட்டுப்போகும்