எதிர்பாரா முடிவு
edhirbaaraa mudivu
எதிர்பாரா முடிவு என் வாழ்கையை துளைத்தாலும் என்றுமே என் துணை நீரே என் நிலை குலைந்து எல்லாம் இழந்து போனாலும் இழந்ததை திரும்ப தந்தீரே
எபினேசரே எல்ரோயியே என்னை கைவிட மாட்டீர் என் கரம் பிடித்தீர் வழி நடத்திடுவீர் கலக்கம் எனக்கில்லையே
1. கடந்த நாட்களில் கண்மணி போல் கருத்துடன் என்னைக் காத்திட்டீரே -2 கருமுதல் என்னை நடத்தி காரியம் வாய்க்க செய்தீர் -2
2. கூப்பிட்ட நேரம் என்குரல் கேட்டு உம் செவி சாய்த்து என் ஜெபம் கேட்டீர் கண்ணீரை துறுத்தியில் வைத்தீர் இரட்டிப்பு நன்மையை செய்தீர்
3. எப்பக்கமும் என்னை சூழ்ந்து கொண்டு உம் கரத்தினால் என்னை மறைத்துக் கொண்டீர் வேடனின் கண்ணிக்கு காத்தீர் இரட்சணிய சந்தோசம் தந்தீர்
4. இமைப்பொழுது என்னை கைவிட்டாலும் இரக்கத்தாலே என்னை சேர்த்துக்கொண்டீர் -2 உம் உள்ளங்கையிலே வரைந்தீர் கிருபையால் மூடிக்கொண்டீர்