எதையும் தாங்கும் இதயம் வேண்டும்
edhaiyum thaangum idhayam vendum
எதையும் தாங்கும் இதயம் வேண்டும் இயேசுவுக்காக வாழ்கின்ற பிள்ளைக்கு எதையும் சகிக்க பெலன் வேண்டும் அவருக்காய் வாழ்கின்ற தேவ பிள்ளைக்கு
அவருக்காய் வாழ்கின்ற தேவ பிள்ளைக்கு எதையும் தாங்கும் இதயம் வேண்டும் -2 எதையும் தாங்கும் இதயம் வேண்டும் இயேசுவுக்கா வாழ்கின்ற நமக்கு எதையும் சகிக்க பெலன் வேண்டும் அவருக்காய் வாழ்கின்ற தேவ பிள்ளைக்கு
தொல்லையின் மிகுதியால் கஷ்டங்கள் வந்தாலும் கர்த்தரே உந்தன் நித்திய கன்மலை -2 ஆகாரை கண்டவர் கண்ணீரை துடைத்திட்டார் உன்னையும் மீட்டிட அழைத்தாரே அன்பினால் -2
என்னென்ன துன்பங்கள் உன் வாழ்வில் வந்தாலும் எதற்கும் அஞ்சாதே இயேசுவே பரிகாரி -2 சிலுவையில் சிந்திய இரத்தத்தால் மீட்பை இன்றே நீ பெறுவாய் சோர்ந்து போகாதே -2
கண்ணீரே உன் வாழ்வின் உணவாக இருந்தாலும் கலங்கித் தவிக்காதே கர்த்தரை நம்பீடு -2 கண்ணீரைத் துடைப்பவர் கதவண்டை நிற்கின்றார் அஞ்சாதே நெஞ்சமே ஆயத்தமாயிரு -2
ஆண்டவர் வருகையே மிகவும் சமீபம் ஆயத்தமாவோம் அப்பாவை சந்திக்க -2 பரிசுத்தம் ஒன்றே அவரின் விருப்பம் இன்றே நாம் கொடுப்போம் நமது உள்ளத்தை -2