எதை நான் தருவேன் இறைவா
edhai naan tharuven iraivaa
எதை நான் தருவேன் இறைவா - உன் இதயத்தின் அன்பிற்கீடாக
குறைநான் செய்தேன் இறைவா - பாவக் குழியில் விழுந்தேன் இறைவா ( 2 ) கறையாம் பாவத்தை நீக்கிடவே - 2 நீ கல்வாரி மலையில் இறந்தாயோ
பாவம் என்றொரு விசத்தால் - நான் பாதகம் செய்தேன் இறைவா ( 2 ) தேவனே உம் திருப்பாடுகளால் - 2 எனைத் தேற்றிடவே நீ இறந்தாயோ