எபிநேசரே உம்மை எப்படி
ebinesarae ummai eppadi
எபிநேசரே உம்மை எப்படி பாடுவேன் எகோவாயீரே உம்மை என்ன சொல்லுவேன் - 2
1. அன்னை போல அனைத்ததை நான் சொல்லவா தந்தை போல சுமந்ததை நான் சொல்லவா - 2 அன்னை என்பதா தந்தை என்பதா சொந்தம் என்பதா சுமை தாங்கி என்பதா - 2
2. கண்மணிபோல் காத்ததை நான் சொல்லவா கழுகுபோல சுமந்ததை நான் சொல்லவா - 2 நண்பன் என்பதா நல் உறவு என்பதா சொந்தம் என்பதா சுமை தாங்கி என்பதா - 2
3. வியாதியிலே சுகம் தந்ததை நான் சொல்லவா தனிமையிலே துணை நின்றதை நான் சொல்லவா - 2 ஆறுதல் என்பதா என் தேறுதல் என்பதா சொந்தம் எனபதா கூமை தாங்கி என்பதா 2
4. பாரசிலுவை சுமந்தவர் நீர் அல்லவா இரத்தம் சிந்தி மீட்டவரும் நீர் அல்லவா - 2 மீட்பர் அல்லவா நல் மேய்ப்பர் அல்லவா சொந்தம் அல்லவா சுமை தாங்கி அல்லவா