எபினேசரே எபினேசரே
ebinesarae ebinesarae
எபினேசரே எபினேசரே இதுவரை உதவினிரே எபினேசரே எபினேசரே இதுவரை நடத்தினிரே -2 வாழ் நாளெல்லாம் நன்றி சொல்வேன் உம் நன்மைகள் நினைக்கின்றேன். -2
நன்றி சொல்லிடுவேன் என்னை மறுகரை சேர்த்தவரை நன்றி சொல்லிடுவேன் என்னை மறவாமல் நினைத்தவரை -2
1. வார்த்தையால் சொல்லி முடியாத வலிகள் வாழ்க்கையில் பெருகினதே -2 - [ ] என் கண்ணீர் அறிந்தீர், என் தனிமை அறிந்தீர் -2 கண் இமைப் போல வைத்துக்கொண்டீர் -2 நன்றி சொல்லிடுவேன்…
2. ஆண்டுகள் முழுதும் இடராது காத்து ஒரு கரு போல சுமந்தவரே -2 என் தாயுமானீர், என் தகப்பனுமானீர் -2 என்னை கரை சேர்க்கும் துனணயுமானீர் -2 நன்றி சொல்லிடுவேன்…
3. அலைமோதும் கடலில் முழ்கின என்னை உம் கரம் தந்து தூக்கினீரே -2 நன்மை செய்தீர் இதுவரை செய்தீர் -2 இனிமேலும் நன்மை செய்வீர் - 2 எனக்கு நன்றி சொலிடுவேன்….