தேவசுதனிவரோ
devasudhanivaro
தேவசுதனிவரோ - ஓ - ஓ - ஓ - இவர் அந்தக் கேடடைந்தார் அந்தோ ! கேடடைந்தவரோ - இவர்
1. மாசில்லா மேனி வாடுதே பாதகர் பரிகாசம் செய்யவும் பாடு சகித்தவரே மா பாவமாகவும் வாதை செய்தனரே - தேவ
2. யூதர்களால் துரோகமே மூர்க்கமாக செய்தனரோ! ஏன் சகித்தவரோ? பூலோகர்க்காகவே துன்பமிதேனோ - தேவ
3. நண்பர்களாலே நன்மையோ நன்றியை துதி செய்வாரில்லையோ? ஆ! பரிதாபம் ஆ! நானிலத்தில் ஏனிந்தக் கேடோ! - தேவ
4. தேவ சமூகம் போனதோ தேசமும் முழு சிருஷ்டியும் வெகுவாய் தவிக்கிறதே வேதாகமத்தில் மா பெரும் பொருளே - தேவ
5. அன்பின் சொரூபம் நையுதே ஆயிரம் பதினாயிரங்களில் சிறந்தவர் என் ஆத்துமாவுக்கு என்றும் நல்லவரே - தேவ