தேவசுதனிவரே குடில்
devasudhanivarae kudil
தேவசுதனிவரே குடில் தன்னை தேடி வந்தாரே
1. ஆதியிலே நித்ய பிதாவின் இருந்த அழிவில்லாத மெய் தேவ சுதன் அன்னையின் மேலாய் அன்பு கொண்டதினால் அவதரித்தார் ஏழை கோலமதாய் - தேவ
2. கிருபை சத்தியம் நிறைந் துதித்தனரே உருவாய் இயேசென்னும் நாமத்தில் பரனின் பூரண கிருபை தான் இவர் கிருபையின் மேல் கிருபை நம் பெறவே - தேவ
3. கந்தை பொதிந்திவர் புல்லணை மீதிலே சுந்தர பாலனாய் துாங்குகிறார் சொந்தமே நமக்கிந்த தாழ்மையின் ராஜன் வந்தனர் எம்மையும் வாழ்விக்கவே - தேவ
4. மரணத்தின் அதிகாரி பிசாசை மரணத்தினால் அவர் அழித்திடவே இருளை போக்கிட இவர் உதித்தாரே அருணோதயமாய் அவனியிலே - தேவ
5. சர்வ சிருஷ்டியின் காரணரிவரே சாவினை ஜெயித்துயர் முதற்பலனால் சரீரம் சபையின் அரும் சிரசாய் தந்திட வந்தாரே தாரணியில் - தேவ