தேவரீருக்கே மிக ஸ்தோத்திரம் மிக
devareerukke miga sthothiram miga
தேவரீருக்கே மிக ஸ்தோத்திரம் மிக -என் தேவரீருக்கே மிக ஸ்தோத்திரம் மிக
1. கண்மணிபோல காவலரே எம்மை கருத்தாய் காத்தீரே செம்மையாய் எம்மை செட்டையில் வைத்து சுகத்துடன் காப்பீர் -என் தேவ
2. எய்திடும் துன்பங்கள் எத்தனையுண்டதற் கெல்லாம் விலக்கினீரே இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே லெங்கள் ஏதம் போக்கினீரே -என் தேவ
3. எங்களின் தேகம் எங்களின் ஆவியும் எல்லாம் உனதன்றோ இவை எல்லாம் படைத்தோம் ஏற்றுக்கொள்ளுமே எல்லாம் உனக்கென்றே -என் தேவ
4. உந்தன் நாமம் அர்ச்சிக்கப்படுக உம் ராஜ்ஜியம் வருக சித்தம் பரலோகம் போல் உலகில் செய்யப்படுக -என் தேவ
5. இராஜ்ஜியம் வல்லமை மகிமையும் கனமும் உமக்கே உடமையே இவ் வெளியார்க்குந்தன் அருள் தந்து ஆசீர்வதித்தருளும் -என் தேவ