தேவரீர்க்கே தினமும்
devareerkke thinamum
தேவரீர்க்கே தினமும் சரணம் திவ்விய நாமத்திற்கே நிதம் சரணம் அனுதினம் அடியார் அன்பினால் வாழ ஆவியின் அபிஷேகம் அளித்திடும் நாதா
தேவையான அருள் அளித்திடவே தேவாசீர்வாதங்கள் தந்திடவே உன்னத பெலத்தால் என்னை நிறைக்க உன்னத ராஜனே உம்மையே பணிந்தோம்
தாழ்மையைத் தாரும் தயவுள்ள குருவே தாழ்மையின் கோலமாய் வந்தவரே நேர்மையாய் நாங்கள் நிர்மல நாதனே உம்தனைப் பணிந்து உயர்வடைந்திடவே
ஆவியின் நிறைவை அளித்திடும் இப்போ ஆவியால் நிறைந்தும்மைத் துதித்திடவே பாவியாம் என்னைப் பரிசுத்தம் செய்ய பாரினில் வந்த பரலோக நாதா
பரிசுத்த ஆவியின் புதுபெலன் அளியும் பரிசுத்த ஜீவியம் செய்திடவே வல்லமை அளிக்கும் வல்லமை தேவனே உன்னதர் உம்மைப் பணிந்திடுவேனே