தேவரீர் மகிமையாய்
devareer magimaiyaay
1. தேவரீர் மகிமையாய் எழுந்திடு வீர் இரங்கியே சீயோன் புத்திரர்க்கே வாஞ்சிக்கிறோம் உன் சாயலை நாம் தந்திடுவீரே நின் தூய்மைதனை
சீயோனின் வல்லமை ஈந்திடு வீர் பரிசுத்தர் இயேசுவே இரங்கியே நீர் உன்னதர் உம் முகம் கண்டிடவே சுத்த இருதயம் சிருஷ்டியுமே
2. ஊரில் ஒருவராய்த் தெரிந்தெடுத்தீர் இனத்தில் இருவராய்ப் பிரித்தெடுத்தீர் நானே உன் நாயகர் என்றுரைத்தீர் சீயோனுக்கென்றுமே பெயர் குறித்தீர்
3. உத்தமரென்றுமே உவந்தளித்தீர் உன்னத ஊழியம் எமக்களித்தீர் பிழிந்திடுவீரே மா கிருபை இதனை தாழ்மையாக உம்மையே சேவித்திட
4. ஆனந்த தைலத்தால் அபிஷேகம் சஞ்சலம் தவிப்பும் போக்கிடும் நித்திய மகிழ்ச்சியும் தலையில் சீயோனின் பாதையில் ஏகிடவே
5. சீயோனைக் கட்டித் தம் மகிமையிலே சீக்கிரமாய் வாரார் சுத்தருக்காய் மகிமையடைந்து நாம் நிர்மலராய் சீயோனில் என்றுமே நின்றிடவே