தேவரீர் என்னை ஆசீர்வதியும் என் எல்லை
devareer ennai aaseervadhiyum en ellai
தேவரீர் என்னை ஆசீர்வதியும் என் எல்லை பெரிதாக்கிடும் உம் கரம் என்மேல்வையும் தீங்கின்றி காத்துக்கொள்ளும் -2
உந்தன் ஆசீர்வாதங்கள் எண்ணற்றவே அவை நிறைவானவே ஏராளமே-2 உம் ஆசீர்களால் என்னை ஆசீர்வதித்து -2 ஆசீர்வாதம் ஆக்கிடுமே என்னை ஆசீர்வாதம் ஆக்கிடுமே
உந்தன் எல்லைகளே அளவற்றதே அவை பெரிதானதே நிறைவானதே -2 பெரிதாக்குமே என் வாசஸ்தலங்கள் -2 வலப்பக்கம் இடப்பக்கமும் என் வலப்பக்கம் இடப்பக்கமும்
எந்தத் தீங்கும் என்னை அணுகாமலே நீர் விலக்கீடுமே விடுவித்தீரே -2 உம் வலக்கரத்தால் என்னை இரட்சித்திடும் -2 உம் இரட்சிப்பால் மகிழ்ந்திடுவேன் உம் இரட்சிப்பால் களிகூறுவேன்