தேவப் பிதா எங்கள் மெய்ப் பரனே
devap pidhaa engal meyp paranae
தேவப் பிதா எங்கள் மெய்ப் பரனே வருவாய் ஆசி தருவாயே. இருவரோ மூவரோ என் பெயரால் இசைந்திருந்தா லிடை வருவேனென்ற
1. காதினில் தொனிக்கும் நல் உரையை கருத்துடனே அகத்திருத்தி வைத்து தேவனே எம் நடக்கையில் விளக்க வேண்டும் உன் அருள் புரி நேசா.
2. நன்னிலமதில் விழு விதையெனவே நாதனே உம் வசனம் பலித்தே ஒன்று நூறாய்ப் பலன் தரவே உதவி செய்வாய் உபகாரா.
3. பறவைகள் விதை தனைப் பொறுக்காமல் படருமுள் முளைகளை நெருக்காமல் அறுப்புக்குத் தருமணி மிகப் பயக்க அருள் மழை பொழிந்து நற் பயிர் வளர.
4. பேசும் நின் தாசர்க்கு வாக்குடனே பேர் வரம் ஆவியும் ரூடவ்ந்திடுவாய் நீசர் மன்றாட்டினை ஏற்றருள்வாய் நிறை தயை சாகர தாரகமே.