தேவப் பேராற்றல் வல்லமை
devap peraatral vallamai
1. தேவப் பேராற்றல் வல்லமை நான் பாடுவேன் என்றும் பர்வதங்கள் ஆழாழிகள் வானமும் படைத்தார் பகலை ஆளும் சூரியன் விண்மீன் சுடர்நிலாவும் பணியும் தேவ மெய்ஞானம் நான் போற்றிப் பாடுவேன்.
2. கர்த்தர் உயிர்கள் அனைத்தும் வார்த்தையால் படைத்தார் நன்மையான நல் ரூடவ்வுகள் சீர் உணவும் தந்தார் நான் தங்கும் பூமி ஆகாயம் எங்கும் அவையெல்லாம் படைப்பின் அற்புதக்காட்சி நான் பாடுவேன் என்றும்.
3. பூக்களும் பூங்கொடிகளும் தேவ மகிமைக்கே கார்மேகம் சீறும் புயல்கள் அவர் கட்டளை கீழ் உயிர்களின் உற்பத்தியும் அடைக்கலம் தஞ்சம் உம் சமுகம் அல்லால் வேறு புகலிடம் காணோம்.