தேவனுக்கே மிக ஸ்தோத்திரம்
devanukke miga sthothiram
தேவனுக்கே மிக ஸ்தோத்திரம் என் இரட்சகர்கே மிக ஸ்தோத்திரம் பரிசுத்த ஆவியே தூய ஆவியே என் தேவரீர்க்கே மிக ஸ்தோத்திரம்
1.காலை மாலை கருத்தாய் காத்திடும் துக்கம் தொல்லை கஷ்டங்களில் என்னை தேற்றிடும் விசுவாசத்தில் என்றும் நான் நிலைத்தோங்கிட என்னை நிற்க செய்தவர்க்கே என்றும் ஸ்தோத்திரம்
2.அவர் பாதத்தினில் பரிசுத்தமாகவே முழுங்கால்கள் மடக்கிப் பாடிப் போற்றுவோம் என் கண்ணீரையோ துருத்தியில் வைக்கிறார் அவர் கணக்கில் வைப்பதற்கென்றும் ஸ்தோத்திரம்
3.தேவன் நமக்கு அடைக்கலம் பெலனும் ஆபத்துக் காலத்தில் அனுகுலத்துணையும் பூமி நிலைமாறிச் சாய்ந்து போனாலும் நாம் பயப்படாமலே காப்பார் ஸ்தோத்திரம்
4.தீமையை விட்டு விலகி நன்மை செய் சமாதானத்தையே தேடி அதை பெற்றுக்கொள் கர்த்தர் நீதிமானையே நோக்கிப் பார்க்கிறார் அவர் விண்ணப்பத்தைக் கேட்பதற்காய் - ஸ்தோத்திரம்