தேவனின் அன்பு
devanin anbu
தேவனின் அன்பு என் தேவனின் அன்பு என் உள்ளத்தில் இன்று வந்தது - 2
ஆஹா ஆராதிப்பேன் ஆராதிப்பேன் என் ஆண்டவரை பாடி மகிழ்வேன்
1. என்னை ஆசீர்வதிக்க மகிமை துறந்தவரே என்னைக் மீட்டுக் கொள்ள தன்னை இழந்தவரே நன்றியாலே நினைத்து துதிப்பேன் நாளும் என்னை அவர் அன்போடிணைப்பேன் - ஆஹா
2. காரிருள் சூழ்ந்த கலங்கி தவித்த வேளை கரங்கள் நீட்டி என்னை அன்பாய் அணைத்தீரே புகழ்ந்து பாடி துதிப்பேன் உன் பாதங்களை என்றும் தொழுவேன் - ஆஹா
3. சாவின் பள்ளத்தாக்கின் நடந்து வந்திடினும் தீங்கு நெருங்கிடும் மறவேன் ஆண்டவரை தூக்கி நிறுத்தி என்னை கண்மணி போல் காத்திடுவார்