தேவனைப் போற்றும்; அவர் அன்புள்ளவர்
devanaip potrum; avar anbullavar
1. தேவனைப் போற்றும்; அவர் அன்புள்ளவர் தம் மைந்தர்களை பரிபாலிக்கிறார். தூதரே போற்றுங்கள்; பரலோகில் போற்றுங்கள். போற்றுவோம் கர்த்தரை.
2. மீட்பரைப் போற்றும்; அவர் அன்புக்காக தம் ஜனங்களைக் கடாட்சிக்கிறாரே; ஆண் பெண்மணிகளே பாலகரே போற்றுவோம். போற்றுவோம் மீட்பரை.
3. ஆவியைப் போற்றும்; தேற்றரவாளனை வானத்தின் பிதா அனுப்பி வைத்தாரே; பிதா குமாரனை பரிசுத்த ஆவியை போற்றித் துதிக்கின்றோம்.