தேவனை உயர்த்தித் துதியுங்கள்
devanai uyarthith thudhiyungal
தேவனை உயர்த்தித் துதியுங்கள் அவர் நாமத்தைப் போற்றியே
தேவனின் செயல் அதிசயமென்று அதிசயம் என்று சொல்லி - 2
1. கொடியவனின் சீறல் கடுமையாய் வரினும் திடபெலனும் ஏழைக்கடைக்கலமுமானார் படும் பலவந்தர் ஆரவாரமென்றும், ஆரவாரம் என்றுமே
2. இவரே நம்தேவன் இவர் நம்மை இரட்சித்தார் இவரின் இரட்சிப்பினால் களி கூர்ந்திடுவோம் இவர் பகைவனைவென்று கீழ்ப்படுத்தி வென்று கீழ்ப்படுத்தினார்
3. கர்த்தரையே நம்பி சத்தியம் கைக்கொண்ட , உத்தம ஜாதியே உட்பிரவேசியுங்கள் பக்தருக்கென்று பலத்த நகரம் பலத்த நகரமுண்டு
4. அன்னியர் ஆள்வதில்லை இந்நிலந்தன்னில் நம்மை மன்னாதி மன்னனே நம்மகிபனாயிருப்பார் மன்னரும் தேவ சமாதானந் தங்கும் சமாதானம் தங்கிடுமே
5. புனிதராய் மரித்தோர் பூரித் தெழும்புவார் பனிபோல் கிருபையை பக்தரின் மேல் பொழிவார் இனி உலகத்தில் இன்னல் பெருகிடும் இன்னல் பெருகிடுமே
6. மறைவிடமு முண்டு மன்னனின் ஜனத்திற்கு குறை விசாரிக்கும் கோபத்தின் நாளிலே அறைக்குள் மறைந்து ஆனந்திக்கும் சபை ஆனந்திக்கும் சபையே
7. சிறந்த விருந்தொன்று சீயோன்மலையின் மீது அருந்த யாவருக்கும் ஆயத்தமாக்குவார் நிந்தையை நீக்கிக் கண்ணீரைத் துடைத்துக் கண்ணீரைத் துடைத்திடுவார்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C G C
C
C G C
C G
G C
C F
Am G C
C G Dm G
Dm G C
C F
Am G C
C G Dm G
Dm G C
C F
Am G C
C G Dm G
Dm G C
C F
Am G C
C G Dm G
Dm G C