தேவனே உந்தன் திரு சமுகம்
devanae undhan thiru samugam
தேவனே உந்தன் திரு சமுகம் என் முன்னே என்றும் செல்லட்டுமே ஆறுதல் எந்தன் வாழ்வினிலே அன்பரே உந்தன் சமுகமே அன்பரே உந்தன் சமுகமே(2)
பாதை தெரியாத குருடனை போல் பேதை தடுமாறும் வேளையிலும் வழிகாட்டி போதித்து நடத்திடும் உந்தன் சமுகம் போதுமய்யா உந்தன் சமுகம் போதுமய்யா(2)
கண்ணீரின் பாலம் கடக்கையிலே கண்ணீரால் படுக்கை நனையும் போதும் கண்ணீரை நீருற்றாய் மாற்றி என்றும் களி கூற பண்ணும் உம் சமுகமே களி கூற பண்ணும் உம் சமுகமே(2)
மேகமீதினில் நீர் வரும் நாள் விண்ணினில் உம்மையும் சந்திக்கவே உந்தனின் சாயலாய் என்னை மாற்றும் உந்தன் சமூகம் போதுமே (2)
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E C#m B F#m A B E E7 A G#m C#m F#m E F# Am E B F#m E E C#m B F#m A B E E7 A G#m C#m F#m E F# Am E B F#m E E C#m B F#m A B E E7 A G#m C#m F#m E F# Am E B F#m E