தேவனே உந்தன் அன்பினை
devanae undhan anbinai
தேவனே உந்தன் அன்பினை எந்நாளும் போற்றி பாடுவேன் உம் கிருபையினை எண்ணியே நான் தினமும் பாடிடுவேன்
சோதனை என்னை நெருக்கும்போது கிருபை தாங்கினதே என் பெலவீன நேரத்தில் மாறாத கிருபை என்னை தாங்கினதே
எனக்காய் மரித்தீர் எனக்காய் உயிர்த்தீர் எனக்காய் எல்லாம் செய்தீர் அந்த அன்பினை மறவேன் அன்பரை துதியுடன் பாடுவேன் காலமெல்லாம்
துரோகியாய் திரிந்தேன் பாவியாய் அலைந்தேன் என்னை மீட்பவரே உம் அன்பின் கரமும் இனிமைக் குரலும் என்னை நடத்தினதே