தேவனே தேசத்தைத் தாரும்
devanae thesathaith thaarum
தேவனே தேசத்தைத் தாரும் அறிகின்ற இந்த இனம் தான் வேண்டுமே
பொன்னோ பொருளோ எனக்கு வேண்டாம் என் ஜனம் வேண்டுமய்யா பேரும் பகலும் எனக்கு வேண்டாம் என் தேசம் வேண்டுமய்யா இந்தியாவை தாருமய்யா
எனக்கு ஈடாய் தேசத்தைத் தாரும் என்னை நான் அர்ப்பணித்தேன் ஜீவனுக்கீடாய் ஜனத்தைத் தாரும் ஜீவனை உம் முன் வைத்தேன் இறங்கி வாருமய்யா
பாவம் பெருகின இடத்தில் உந்தன் கிருபை பெருகிடுதே சோதோமின் பாவம் சீக்கிரம் மாற கிருபை செய்யுமய்யா இரக்கம் செய்யுமய்யா