தேவனே சர்வ வல்லவர்
devanae sarva vallavar
1. தேவனே சர்வ வல்லவர் நீரே தேவரீர் உந்தன் அதிசய செயல் நனைந்தேன் பொங்குது என் உள்ளம் உந்தன் அன்பினால் போற்றி புகழுவேன் என் இயேசுவே
என்னை அழைத்தவர் நீரல்லவோ உந்தன் கிரமதில் ஒப்புவித்தேன் என்னை சீர்ப்படுத்தி இன்னும் ஸ்திரப்படுத்தி உந்தன் பலமீந்து நிலைநிறுத்தும்
2. யாவையும் உமக்காய்ப் படைத்தீரே யாவும் முடிந்தது என்றுரைத்தீரே சிலுவையிலே உந்தன் சத்தம் கேட்டு உம் அடி தொடர்ந்தே உந்தன் சித்தம் செய்வேன் என்றென்றும் - என்னை
3. ஊற்றினார் உமதன்பை என் உள்ளில் மாற்றுவார் என்னை உந்தன்' திரு சாயலை உயிர்ப்பித்தென்னையும் புதுப்பியும் நாதா உம்மோடு சேர்வதே என் வாஞ்சையே - என்னை
4. ஜெயித்தாரே துஷ்ட வல்லமை யாவும் ஜெயிப்போர் உந்தன் சிங்காசனம் சுதந்தரிப்பான் ஜெயம் அடைவேனே ஆவியின் பெலத்தால் ஜெயித்தோனாய் என்றும் ஜீவிப்பேனே - என்னை
5. வாருமே வருவேனென்றுரைத்தவா வசந்த கால வாசனை வீசிடுதே காத்திருக்கும் சீயோன் சாலேமைச் சேர்த்திட கர்த்தாவே விரைந்தே வந்திடுமே - என்னை