தேவனே இராஜனே ஜீவனே
devanae iraajanae jeevanae
தேவனே இராஜனே ஜீவனே வழியே சத்யமே ஜீவனே-2 நீர் ஒரு நாள் வருவீர் எக்காள சத்தத்திலே மேகம் மீதில் வருவீர் எக்காள சத்தத்திலே-2
1.காத்திருப்பதால் நான் பெலன் அடைந்தேன் கழுகு போல நான் பறந்திடுவேன் ஓடினாலும் இளைப்படைவதில்லை நடந்தாலும் சோர்ந்து போவதில்லை-2-தேவனே
2.வீணாக நான் என்றும் ஓடினதில்லை வீணான பிரயாசமும் பட்டதில்லை நியமித்த ஓட்டத்தில் ஓடுவதால் நிச்சயமாய் பரிசை வென்றிடுவேன்-2-தேவனே
3.மரணத்தின் கூரை முறித்திடுவேன் பாதாளத்தின் வாசல் அடைத்திடுவேன் வருகையின் நாளை நினைத்து தினம் வானத்தின் வாசலில் காத்திருப்பேன்-2-தேவனே