தேவனே என் தந்தையே
devanae en thandhaiyae
தேவனே என் தந்தையே - என்னைத் தேடி வந்த ஆயனே ஒரு நிமிஷம் கூட உம்மைவிட்டு பிரியமாட்டேனே
1. நான் போகும் இடங்களெல்லாம் நீங்க வரணும் நான் பேசும் பேச்செல்லாம் நீங்க பேசணும் உம் பிள்ளை என்பதை இந்த உலகம் அறியணும் நீர் தந்தை என்பதை இந்த உலகம் சொல்லணும்
2. என் தாயின் கருவினிலே என்னை கண்டவர் என் கண்கள் கலங்காமல் தினம் பார்த்துக்கொண்டவர் உம் உள்ளங்கைகளில் என்னை வரைந்தவர் கைவிடாமலே என்றும் காப்பவர்
உம் உள்ளங்கைகளில் என்னை வரைந்தவர்... கைவிடாமலே என்றும் காப்பவர்...(2)
ஒரு நிமிஷம் கூட உம்மை விட்டு பிரிய மாட்டேனே....(2) தேவனே என் தந்தையே என்னை தேடி வந்த ஆயனே....(2) ஒரு நிமிஷம் கூட உம்மை விட்டு பிரிய மாட்டேனே....(2)