தேவன் உன் சுமைதாங்கி
devan un sumaidhaangi
தேவன் உன் சுமைதாங்கி. தோள்மேல் சுமை ஏன் இன்னும்? தேவன் உன் பரிகாரி தோழா ஏன் அழுகை இன்னும்?
1. கறுப்பானவன் நீ கரியானவன் என்று வெறுப்பாகப் பிறர் கூறினும் கடிந்திடுவார் சாத்தானையே கடன் தீர்த்து உடை தருவார்.
2. கலியாண சாலையில் விருந்தாளிக்கு ராஜா பொலிவான உடை கொடுத்தார். உடுத்தாமேல ஒருவன் வந்தான் கெடுத்தானே மகிழ்ச்சிதனை.
3. இளைப்பாறுதல் தான் கொடுத்திடவே யேசு களைத்தோரை அழைக்கின்றாரே! வருந்துவோரே விழுந்திடாதீர் விருந்துண்டு வந்திடுவீர்