தேவன் தங்கும் வாசஸ்தலம்
devan thangum vaasasthalam
தேவன் தங்கும் வாசஸ்தலம். துதி ஸ்தோத்திரம், சமாதானம், தேவ மகிமை நிறைந்ததுவே எமதுள்ளம் தேவனின் ஆலயமே!
1. இயேசுவின் தூய இரத்தத்தால் இன்னும் அவர் உபதேசத்தினால், பரிசுத்த ஆவியால் எமதகமே பங்கமில்லாத் தூய்மை அடைந்திடுதே
2. சத்திய ஆவியானவர் செம்மை இதயத்தில் வாசம் செய்வார். ஜெய ஜிவியம் நித்தம் ஓங்கிடும் சிங்காசனம் பெற்று வாழ்ந்திடுவோம்.
3. சத்துருவைத் தம் பாதத்தின் கீழ் சீக்கிரம் தாழ்த்திடும் காலம் வரை வலது பாரிசத்தில் வீற்றிருப்பார்; வெற்றி அளித்தெம்மைச் சேர்த்திடுவார்
4. அன்பின் நிமித்தம் கெம்பீரித்து, ஆண்டவர் நம்முடன் சந்தோஷித்து, நம் நடுவே தேவன் அமர்ந்திருப்பார் நம் மனம் பூரித்துப் பாடிடுவோம்.
5. பற்பல பாஷை பேசிடுவோம், தற்பரன் ஆவி எம்மை நிரப்பும், இதுவே அவர் தரும் இளைப்பாறுதல் இன்னும் தேவ ஆவி ஊத்திடுவார்.
6. அன்பின் குமாரன் இராஜ்யத்தில் அன்பராம் இயேசு வே ஆண்டிடுவார் அவருடன் சீயோன் மலை மீதிலே அற்புதமாய் நன்மை நிறுத்திடுவேன்.