தேவன் தங்கும் எந்த
devan thangum endha
1. தேவன் தங்கும் எந்த வீடும் திருப்பதி யாகும்; பரம ஆறுதல் ஐக்யம் அன்பும் பெற்று வாழும்!
2. கர்த்தன் நாமம் காதுக்கின்பம் ஆக்கும் வீடு மோட்சம்; காலை பாலர் இயேசைப் போற்ற களித்தென்றும் வாழும்!
3. ஜெபத் தொனி கேட்கும் வீடு செழித்து வாழுமே; ஜீவ வேதம் வாசிப்பொரும் மேல் நோக்கி வாழ்வரே!
4. கர்த்தாவே! எங்கள் வீட்டிலும் நித்தம் நீர் தங்கிடும் உத்தம மனதோடும் மேல் பக்தி தந்தருளும்!