தேவன் சுதன் தந்தார்
devan sudhan thandhaar
1. தேவன் சுதன் தந்தார் ஓ! மா அன்பு பாவ மன்னிப்பீந்தார் ஓ! மா அன்பு மா பாவியானாலும் நிர்ப்பந்தனானாலும் என்னைக் கை தூக்கினார் ஓ! மா அன்பு.
2. என் கடனைத் தீர்த்தார் ஓ! மா அன்பு கட்டுகள் தகர்த்தார் ஓ! மா அன்பு நீதி நிறைவேற்றி என்னை ரூடவ்டேற்றினார் யேசு ராஜன் ஆனார்! ஓ! மா அன்பு.
3. நம்புறேன் உள்ளத்தில் ஓ! மா அன்பு பேர் உண்டு சொர்க்கத்தில் ஓ! மா அன்பு என் பயம் நீங்கிற்று என் பாவம் போயிற்று சந்தோஷம் ஆயிற்று ஓ! மா அன்பு.