தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம்
devan seydha nanmaigalukkellaam
தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம் நன்றி சொல்லிடவே-2 நாவும் போதாது நாளும் போதாது ஆயுளும் போதாது-2
1.வாழ்வின் வழியில் கால்கள் மேலும் தளர்ந்து வீழாமல்-2 தாங்கி நடத்தலை நினைக்கையிலே என் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த
2.பாவியாம் என்னை மீட்டிட இயேசு கல்வாரியில் தனது-2 ஜீவன் தந்தது நினைக்கையிலே என் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த
3.ஆணிகள் காலில் அடிக்கப்பட்டது என் பெயர்காயன்றோ-2 சிலுவையின் அன்பை நினைக்கையிலே என் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த
4.முள்முடி சூடி தொங்கப்பட்டது என் பெயர்க்காயன்றோ-2 ஒவ்வொரு நாளும் நினைக்கையிலே என் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த