தேவன் நமக்கு அடைக்கலமும்
devan namakku adaikkalamum
தேவன் நமக்கு அடைக்கலமும் ஆபத்துக்காலத்தில் துணையுமானவர் தேவன் நமக்கு அனுகூலமும் ஆபத்துக் காலத்தில் பெலனுமானவர்
ஆகையால் பூமி நிலை மாறினும் மலைகள் நடுக்கடலில் சாய்ந்து போனாலும் அதன் ஜலங்கள் கொந்தளித்துப்பொங்கி பர்வதங்கள் அதிர்ந்தாலும் பயப்படோம்.
நதி ஒன்றுண்டு அதின் நீர்க்கால்கள் தேவனது பரிசுத்த நகரத்தையும் உன்னதமானவர் வாசம் பண்ணும் தூய ஸ்தலத்தையும் சந்தோஷப்படுத்தும்
அதின் நடுவில் தேவன் இருக்கிறார் அது என்றென்றைக்கும் ஒருபோதும் அசையாது அதிகாலையில் தேவன் அதற்கு சகாயம்பண்ணுவார் என்றும் அல்லேலூயா
ஜாதிகள் கொந்தளித்தது அவர் தமது சத்தத்தை முழங்கப்பண்ணினார் ராஜ்ஜியங்கள் தத்தளித்தது பூமி உருகி அகன்று போயிற்று.
பூமியிலே பாழ்கடிப்புகளாம் கர்த்தரது செய்கைகளை வந்து பாருங்கள் சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார் யாக்கோபின் தேவனே நமக்கடைக்கலம்.
பூமியின் கடைமுனைக்கும் யுத்தங்களை தேவன் என்றும் ஓயப்பண்ணுகிறார் வில்லை ஒடித்து ஈட்டியை முறிக்கிறார் ரதங்களை தீயால் சுட்டெரிக்கிறார்.
நீங்கள் எனக்குள் அமர்ந்திருந்து நானே தேவன் என்று அறிந்து கொள்ளுங்கள் ஜாதிகளுக்குள் உயர்ந்திருப்பேன் பூமியில் என்றும் உயர்ந்திருப்பேன்.