தேவன் இரட்சகரே நம்மைக் காக்கும்
devan iratsagarae nammaik kaakkum
தேவன் இரட்சகரே நம்மைக் காக்கும் வல்லவரே - ஆயுட் கால நாள் வரை வழுவாமல் காத்திடுவார்
அவர் நீதி எந்த நாளுமே அருளாட்சி வழி செல்லுமே - இரட்சிப்பின் மகிமை நமை ஆளும் வல்லமை கலங்காமல் திகையாமல் காத்திடுமே
நம் பாவம் போக்குகின்றவர் நம் தாகம் தீர்க்கின்றவர் - பரிசுத்தம் அருள்வார் நல் மீட்பு தருவார் இரட்சண்யக் கொம்பினை உயர்த்திடுவோம்
சந்தானம் அளிக்கின்றவர் சந்ததியை வளர்க்கின்றவர் - சீயோனில் இரட்சிப்பும் இஸ்ரவேலில் மகிமையும் தருகின்ற தேவனை உயர்த்திடுவோம்