தேவன் அருளிய சொல்லி முடியா
devan aruliya solli mudiyaa
தேவன் அருளிய சொல்லி முடியா ஈவுக்கு ஸ்தோத்திரம் தேவன் தந்த ஒரே பேரான குமாரன் இயேசுவே தம்மை விசுவாசிப்போராக்க இரட்சிப்படைந்திடவே
1. யாரிவரோ யாரோ (2) ஜெகத்தினில் பாவியை மீட்க ஜெனித்தவர் யார் இவரோ அவர் இயேசுவே- 4 சவுலைப் பவுலாய் மாற்றி இரட்சித்தவர் இயேசுவே அவர் இயேசுவே - 4
2. யாரிவரோ யாரோ (2) அலைகடல் மேலே நடந்துவந்தவர் யார் இவரோ அவர் இயேசுவே - 4 அகோர காற்றையும் கடலையும் அமர்த்தினவர் இயேசுவே அவர் இயேசுவே - 4
3. யாரிவர் யாரோ (2) மாலையில் கடலோரம் சீஷர்கள் கண்டது யார் இவரோ அவர் இயேசுவே - 4 கவலைகள் போக்கி கண்ணீர் துடைப்பவர் நம் இயேசுவே என் இயேசுவே - 4