தேவன் அருளிய சொல்லி
devan aruliya solli
தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவுக்காக ஸ்தோத்திரம் அவர் செய்த அதிசயம் ஆயிரம் என் வாழ்வில் அனுதினம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2
1. என் தாயாய் அரவணைத்தீர் தந்தையாய் தோளில் சுமந்தீர் – 2 உணவும் உடையும் உறைவிடமும் தந்தீரே ஸ்தோத்திரம் – 2
ஆபிரகாமின் தேவனே ஸ்தோத்திரம் ஈசாக்கின் தேவனே ஸ்தோத்திரம் யாக்கோபின் தேவனே ஸ்தோத்திரம்
2. என் கைகளை போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் – 2 படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் – 2
சாரோனின் ரோஜாவே ஸ்தோத்திரம் சாலேமின் ராஜாவே ஸ்தோத்திரம் சமாதான கர்த்தரே ஸ்தோத்திரம்
3. கர்த்தாவே நான் உமக்குப் புதுபாட்டைப் பாடுவேன் தம்புரு வீணையினாலும் உம்மை கீர்த்தனம் பண்ணுவேன்
ஆத்தும நேசரே ஸ்தோத்திரம் ஆலோசனை கர்த்தாவே ஸ்தோத்திரம் ஆசீர்வதிக்கும் தேவனே ஸ்தோத்திரம்