தேவன் ஆராதனைக்குரியவரே
devan aaraadhanaikkuriyavarae
தேவன் ஆராதனைக்குரியவரே – இவர் மாறாத கிருபை நமக்கே – 2 ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை நல்லதே – 2
பகைவர்கள் என்னை துரத்தின போது ஜீவனை காத்தீரே – 2 ஒவருவரும் கடந்து வராதபடிக்கு மதிலாய் மாறினீரே – 2 – ஜீவனை
சோதனை வேளை தளர்ந்திட்ட போது தாங்கிடவே நிறுத்தினீர் – 2 ஒருவரும் குறைகள் சொல்லாதபடிக்கு அரணாய் மாறினீரே – 2 – ஜீவனை
எதிர் கொண்டு வந்த செங்கடலே உன்னை மரித்து பாதை தந்தார் தடை செய்து நின்ற பர்வதமே உன்னை உருகிப் போக செய்தார்