தேவாவியால் இரக்கமாய் உண்டான வேதமே
devaaviyaal irakkamaay undaana vedhamae
1. தேவாவியால் இரக்கமாய் உண்டான வேதமே உயர்ந்த ஞானமுள்ளதாய் அருளப்பட்டதே; அருளப்பட்டதே.
2. அதில் பிறந்த போதனை விளக்கைப்போலவே கதிக்குப் போகும் மார்க்கத்ததை விளக்கிக் காட்டுமே; விளக்கிக் காட்டுமே.
3. இவ்வருள் வேதம் தந்ததால் கர்த்தாவே உமக்கே எந்நாளும் சர்வ சபையால் புகழ் உண்டாகுமே; புகழ் உண்டாகுமே.