தேவாவி என்மேல் சந்தோஷமாய்
devaavi enmel sandhoshamaay
தேவாவி என்மேல் சந்தோஷமாய் தேவாவி என் மேல் சமாதானமாய் தேவாவி என் மேல் வல்லமையாய் தேவாவி என் மேல் எழுப்பதலாய்
மகிமை ஆவி இறங்கிடுதே மறுரூபமாகி பறந்திடுவேன் மேசியா ஏசு வருகிறார் மேகத்தில் என்னை எடுத்துக் கொள்வார்
2. தேவாவி என்மேல் அச்சாரமாய் தேவாவி என்மேல் அபிஷேகமாய் தேவாவி என்மேல் முத்திரையாய் தேவாவி என்மேல் மூன்றில் ஒன்றாய்
3. தேவாவி என்மேல் புது எண்ணெய் தேவாவி என் மேல் புது பெலனாய் தேவாவி என்மேல் புது மொழியாய் தேவாவி என் மேல் பது வரமாய்
4. தேவாவி என் மேல் மாரி மழையாய் தேவாவி என்மேல் ஜீவநதியாய் தேவாவி என்மேல் வெண்பனியாய் தேவாவி என்மேல் வெண்புறாவை
5. தேவாவி என் மேல் இடி தொனியாய் தேவாவி என்மேல் பெருங்காற்றாய் தேவாவி என்மேல் அக்கினி நாவாய் தேவாவி என்மேல் நேசத்தழலாய்