தேவாட்டுக் குட்டியே வாழ்த்திடுவோம்
devaattuk kuttiyae vaazhthiduvom
தேவாட்டுக் குட்டியே வாழ்த்திடுவோம் சாலேமின் ராஜனை ஆராதித்திப்போம் – 2
பரிசுத்தர் பரிசுத்தர் யேசுவே – 4 பாத்திரர் ஸ்தோத்திரம் ஞானம் மகிமையும் துதி கனமும் வல்லமை பெலனும் ஏற்றுக்கொள்ள – 2
1. ஆகாயம் பூமிக்கு மேலே உயர்ந்தது போல் தம் கிருபை எனக்கும் பெரியது மேற்கிற்கும் கிழக்கிற்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவாய் பாவங்கள் நம்மை விட்டு அகற்றினார் – 2
2. தகப்பன் தன் பிள்ளைக்கு இரங்கும் போல் தாய் தன் பிள்ளையை கொஞ்சும் போல என் தேவன் என்னையும் நேசித்தாரே தள்ளாமல் தம் மகனாய் ஏற்றாரே – 2
3. தண்ணீரை நான் கடக்கும் போது வெள்ளம் என்மேல் புரளுவதில்லையே தீயின் மீதாய் நான் நடந்தாலும் அக்கினியால் எரிந்து போவதில்லையே – 2
ஏன் என்றால் என் தேவன் இஸ்ரவேலின் பரிசுத்தர் யெகோவாவாம் எந்தன் இரட்ச்சகர்
பாத்திரர் ஸ்தோத்திரம் ஞானம் மகிமையும் துதி கனமும் வல்லமை பெலனும் ஏற்றுக்கொள்ள தேவாட்டுக்குட்டியை…..