தேவாட்டின் திரு இரத்தத்தால்
devaattin thiru irathathaal
1. தேவாட்டின் திரு இரத்தத்தால் நான் சுத்தமாக்கினேன், அவரின் சுத்த இரத்தத்தால் நான் ஜெயம் பாடுவேன் மகிமை இரட்சகா! துதி உமக்கென்றும் சேற்றில் நின்றென்னை நீர் மீட்டெடுத்தல், துதிப்பேன் உம்மை நான் ஆயுள் முழுவதும் நன்றியோடு பணிந்து.
2. சந்தோஷித்தும்மைப் பாடுவேன் சீயோன் யாத்திரையில்; பந்தயப் பொருள் பெற்றிட நான் முந்தி ஆகிறேன் கிடைக்கும் நிச்சயம் கிரீடம் எனக்கு சத்துருக்களை கொண்டு போவதில்லை, கர்த்தர் கையில் நின்று அன்று நான் பெறுவேன் தூதர் கூட்டத்தின் மத்தியில்,
3. என் பாக்கியம் நினைக்கயில் என் உள்ளம் துள்ளுதே பூலோக சுகம் தள்ளினேன் மெய்ப் பாக்கியம் கண்டு. நித்திய நகரில் சேர்ந்து நான் பாடுவேன் ராஜன் முகங்கண்டு என்றும் சந்தோஷிப்பேன். இரத்தத்தின் பலன் வாழுவேன் சொர்க்கத்தில் கோடி கோடி யுகங்களாக.
4. மனோகரமாம் சீயோனில் நான் வேகம் சேருவேன் கிலேசம் முற்றும் நீங்கிப்போம் அவ்விடம் ஏக, நித்திய சந்தோஷம் போற்றிடுவேன் அங்கே, சத்துரு வந்ததை கொண்டு போவதில்லை. ஆனந்தம் கூடுமே, கீதங்கள் பாடுவேன் இயேசுவின் சமூகம்.