தேவாட்டின் காந்தையே
devaattin kaandhaiyae
தேவாட்டின் காந்தையே - அதை துலங்குதே பிரபை இலங்குதே மகிமை விளங்குது இனிமை
1. தன் மணவாளனுக்காய் தன் ஜீவ தேவனுக்காய் தன்னைத்தான் ஆயத்தஞ் செய்தவள் தேவ மகிமை அவளில் வீசுதே ஆ! வினோதமே - தேவா
2. ஜெயவீரர் நகரம் ஜெயங்கொண்டோர்க்குரிமையே ஜெயமே அத்தேசக்கீதமே தேவனே தம் ஜனத்தின் கூடவே என்றும் வாழுவார் - தேவா
3. பன்னிரு வாசலில் பொன்னான வீதியும் மின்னுதே பன்னிருவர் நாமம் மேன்மை சேர்பளிங்கின் பிரபையும் தேவசோபையே - தேவா
4. தேவாலயம் அதில் தேவாதி தேவனே தேவ கிருபையே வெளிச்சம் புதிய புவியோர் அதில் நடக்கவே மகிழ்ந்திலங்கவே - தேவா
5. என்று நான் சேர்வேனோ என் இன்ப வீட்டிலே இராக்காலமில்லா நகரிலே ஜோதியாக வாழுவேன் நிதம் தேவ சமுகமே