தேவாதி தேவனுக்கு துதி
devaadhi devanukku thudhi
தேவாதி தேவனுக்கு துதி திரியேக நாதனுக்கு துதி தேவ சேயரானோர் சேர்ந்து சேவிக்கும் உன்னத தேவ நாமத்திற்க்கே ஸ்தோத்திரம் துதி
போற்றுவேன் துதி சாற்றுவேன் நேற்றும் இன்றும் மாறாத நம் நேசனை - தேவா
1. ஆ... ஆ... கர்த்தனை ஆத்துமாவே ஸ்தோத்தரி ஆ... சுத்த நாமத்தையே நிதம் ஸ்தோத்தரி எத்தன் செய்த உபகாரங்கள் அத்தனையும் மறவாதிரு உத்தமன் உன் அக்கிரமங்கள் யாவையும் மன்னித்தார் நித்தம் துதிக்க உன் நோய் நீக்கி விட்டார் - போற்று
2. ஓ... மீட்டினார் உன் பிராணன் அழியாது ஓ ... சூட்டினார் முடி இரக்கம் கிருபையால் ஊட்டினார் உன் வாயை நன்மையால் நாட்டினார் மீண்டும் பெருங் கழுகைப் போல காட்டின தேவ அன்பை எண்ணி என் ஆத்துமாவே பாட்டினாலும் புகழ்ந்தேற்றி ஸ்தோத்தரி - போற்று
3. ஆ... நாம் பாவங்களுக்கு தக்க செய்யாமல் ஆ... நம் அக்கிரமங்கட்கு சரி கட்டாமல் தம்முடைய மாபெரும் கிருபையால் நம்முடைய பாவங்கள் அகற்றினார் கர்த்தர் உருக்கமும் இரக்கமும் கிருபையும் மெத்த சாந்தமும் உள்ளவர் ஆமென் - போற்று
4. ஓ... புல்லைப் போலவே மனிதன் நாட்களாம் எல்லையில்லாதது கர்த்தர் கிருபையும் வானத்தில் சிங்காசனம் ஸ்தாபித்து ஞானமோடு அவர் ஆள்வதால் உன்னதத்தின் சர்வ சேனைகளோடு சேர்ந்துமே என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி - போற்று