தேவாதி தேவனுக்கே துதி திரியேக
devaadhi devanukke thudhi thiriyega
தேவாதி தேவனுக்கே துதி திரியேக நாதனுக்கே துதி தேவ சேயரானோர் சேர்ந்து சேவிக்கும் உன்னத தேவ நாமத்திற்கே ஸ்தோத்திரம் துதி - 2
போற்றுவேன் துதி சாற்றுவேன் நேற்றும் இன்றும் மாறாத நம் நேசரை - 2
ஆ... கர்த்தரையே ஆத்துமாவே ஸ்தோத்திரி ஆ... சுத்த நாமத்தையே நிதம் ஸ்தோத்திரி அத்தன் செய்த உபகாரங்கள் அத்தனையும் மறவாதிரு உத்தமர் உன் அக்கிரமங்கள் யாவும் மன்னித்தார் நித்தமும் துதிக்க உன் நோய் நீக்கிவிட்டார்
2. ஓ .. மீட்டினார் உன் பிராணனை அழியாது ஓ ....சூட்டினார் முடியிரக்கம் கிருபையால் ஊட்டினார் உன் வாயை நன்மையால் நாட்டினார் மீண்டும் பெலன் கழுகைப்போல் காட்டின தேவன்பை எண்ணி என் ஆத்துமாவே பாட்டினாலும் புகழ்ந்தேற்றி ஸ்தோத்திரி
3. ஆ.. நம் பாவங்களுக்குத்தக்க செய்யாமல் ஆ.. நம் அக்கிரமங்களுக்குச் சரிக்கட்டாமல் தம்முடைய மாபெருங் கிருபையால் நம்முடைய பாவங்களகற்றினார் கர்த்தர் உருக்கமும் இரக்கமும் கிருபையும் மெத்த சாந்தமும் உள்ளவர் ஆமென்