தேவாதி தேவனின்
devaadhi devanin
தேவாதி தேவனின் நேச குமாரன் பாடுகள் தாங்குவேன் - இப்பாரதில்
1. ஆகாயப் பறவைக்கும் ஆறிடக் கூடுமுண்டே யாவையுந்தான் படைத்த - கர்த்தாவுக்கு போக்கிடந்தானில்லையோ - இம்மண்ணதில் - தேவா
2. மரிப்போமென்ற சீஷரு மறுத்து விட்டோடினாரோ மாபெரும் பாரத்தினால் - மயங்கையில் ஆற்றுவார் தானில்லையோ - இப்பூவிலே - தேவா
3. ஆயிரமாயிரம் பேரிலு மழகுள்ளோன் அந்தக்கேடடைந்திப்போ - பார்ப்பதற்கு அழகற்றுத் தோன்றுவதேன் - பிலாத்துமுன் - தேவா
4. சர்வ ஞானத்தி மூன்றாம் தயாபர தேவன் தாமொன்றும் பேசா தோராய் - தாழ்மையுருவாய் தயங்கி நிறமாறுவதேன் - போர் வீரர் முன் - தேவா
5. பொல்லாத மானிடரின் மூர்க்கமாக மையோ தொல்லையில்லா பரனை - ஆ - ஆ - ஆ - ஆ கொல்வதுதான் நீதியோ - என் தெய்வமே - தேவா