தேவாதி தேவனை தேடி வாருங்கள்
devaadhi devanai thedi vaarungal
தேவாதி தேவனை தேடி வாருங்கள் நம் கர்த்தாதி கர்த்தரை காண வாருங்கள் தூயதி தூயரை துதித்து பாடுங்கள் நம் ராஜாதி ராஜனுக்கு ராகமீட்டுங்கள் - 2
அவர் பாவிகளை மன்னிக்க பரிசுத்தராய் வந்தார் நம் பாவங்களை நீக்கி இந்த மண்ணுலகை தந்தார் - 2
1. அனுதினம் துதித்திட அவர் வழி நடந்திட ஆலோசனை தரும் கர்த்தர் அவர் அல்லவா மரணத்தை ஜெயிக்க மனிதனாய் ஜெனித்த பரமன் இயேசு புகழை நானும் பாடி சொல்லவா - 2
கொண்டாடுவோம் அவரை ஆர்பரிப்போம் அகமகிழ்வோம் இயேசுவை துதி பாடுவோம்
2. நினைவெல்லாம் நிறைந்தவர் நிழலாக வருபவர் நித்தம் எண்ணி துதி பாடும் தூயர் அவர் வருகையை நினைத்தே வரும்வரை நிலைப்பேன் வாக்கு மாறா தேவன் அவரை வாழ்த்தி பாடுவேன் - 2
கொண்டாடுவோம் அவரை ஆர்பரிப்போம் அகமகிழுவோம் இயேசுவை துதி பாடுவோம்