தேவாதி தேவனே மகத்துவம்
devaadhi devanae magathuvam
1. தேவாதி தேவனே மகத்துவம் - ஸ்தோத்ரம் தேசிகர் போதனை ஜீவா - ஸ்தோத்திரம்
வந்தனம் தந்துமைச் சொந்தமாய்ப் போற்றுவேன் இந்த வேளை தனில் வந்தருள் ஈகுவாய்
2. ஈனப்பாவி எந்தன் மீட்பர் - ஸ்தோத்திரம் ஈனச் சிலுவையை எடுத்தாய் - ஸ்தோத்திரம் - வந்
3. வியாகுல நேரத்தில் நேயனே - ஸ்தோத்திரம் வியாதி படுக்கையில் சகாயனே - ஸ்தோத்திரம் - வந்
4. ஆலோசனை தரும் ஞானம் - ஸ்தோத்திரம் அல்லல்கள் தீர்த்திடும் வல்லவா - ஸ்தோத்திரம் - வந்
5. மாலை மயங்கையில் ஜோதியே - ஸ்தோத்திரம் காலை சமயத்தில் என் ஜீவனே - ஸ்தோத்திரம் - வந்
6. அன்பர் விட்டோடும் மாறிடா - நண்பனே கொண்டேன் ரத்தத்தால் கொற்றவா - ஸ்தோத்திரம் - வந்
7. துன்பம் மகோரமாய்ச் சூழ்ந்திடும் - நேரத்தில் இன்பமாக என்னை ஏற்றவா - ஸ்தோத்திரம் - வந்