தேவாதி தேவன் ராஜாதி
devaadhi devan raajaadhi
தேவாதி தேவன் ராஜாதி ராஜன் பாவ உலகினில் வந்துதித்தார் ஏரோது மாளிகை தேடாத மா ராஜன் ஏழை தொழுவத்தில் ஜெனித்தவர்
வானத்தில் தோன்றும் ஓர் நட்சத்திரம் வான சாஸ்திரிகள் முன் சென்றாலும் பாதை தவறியே சோகமடைந்த பின் பாலகன் இயேசுவைக் கண்டடைவோம்
அன்னை மரியாள் அளவில்லாத ஆசீர்வாதங்கள் மிக அடைந்தாள் அந்த கிருபைகள் சொந்தமுடன் பெற ஆண்டவர் இயேசுவைக் கண்டடைவோம்
சத்திரத்திலேஸ்தலமில்லையே சத்திய தேவன் தலை சாய்க்கவே தாழ்மை சொரூபியே தாழ இறங்கியே தங்கும் இடத்தை கண்டடைவோம்
ஆண்டவர் பிறந்த பெத்லகேம் ஆயிரங்களில் சிறியஸ்கனும் இஸ்ரவேல் ராஜனை இம்மானுவேலனை இன்பமுடன் தேடி கண்டடைவோம்
கண்ணார கண்டேன் உம் இரட்சண்யத்தை காலா காலமாகக் காத்திருந்தேன் என்று சிமியோன் தன் கையில் எடுத்து நம் இயேசுவைவாழ்த்தியே கண்டடைந்தான்
தள்ளின கல்லே தலைக்கல்லாக தாமதமின்றி வருகின்றவர் ஆயர் குடிலிடை பாலகனாய் தோன்றும் தூய பிதாமுகம் கண்டடைவோம