தேவா உந்தன் பலியாக என்னைத் தந்தேன்
devaa undhan paliyaaga ennaith thandhen
தேவா உந்தன் பலியாக என்னைத் தந்தேன் என்றும் எந்தன் பணிவாழ்வை ஏற்றிடுவாய்
அன்பொன்றே தினம் தேடி அலைகின்ற நெஞ்சங்கள் விதியில் ஆயிரமே அரவணைக்கும் கரம் தேடி ஆர்வமுடன் காத்திருக்கும் மனிதர்கள் கூட்டம் இங்கே ( 2 ) அன்போடு நான் வாழுவேன் - சிந்தும் கண்ணரை நான் மாற்றுவேன் ( 2 ) நல்லன்பைத் தேடும் புவி மாந்தர் வாழ என் வாழ்வைப் பலியாக்குவேன் - 2
விடியாத பொழுதென்று வீங்கிடும் விழியோடு ஏங்கிடும் மாந்தர் இங்கே முடியாது என்றெண்ணி முகம் சோர்ந்து போகும் பரிதாப வாழ்க்கை இங்கே ( 2 ) தேவா நான் சுடராகுவேன - எங்கும் நம்பிக்கை ஒளியேற்றுவேன் ( 2 ) போராடும் நெஞ்சில் போராட்டம் ஏற்க என் வாழ்வைப் பலியாக்குவேன்