தேவா உம்மை நான்
devaa ummai naan
தேவா உம்மை நான் என் வாழ்வில் ருசித்தீடவே மீதமுள்ள என் நாட்களில் உலகை நான் வெறுத்தீடவே
நாதா... தேவா... இரங்கும்... உம்... தயவால்
1.பாதை எல்லாம் இருளாகி போக என் வாழ்வில் வந்திட்ட வீழ்ச்சி எதுவோ எதிலே விழுந்தேன் என்று அறிந்து எழும்பி உமக்காய் எரிந்தீடவே
2.உலகில் பாடுகள் எனக்கு உண்டு ஆனாலும் நீர் என்னை கைவிடுவதில்லை ஆகிலும் என்னுள்ளில் கலக்கம் ஏனோ உம்மை என் கண்கள் பார்க்க வேண்டுமே
3.பச்சை மரத்திற்கு இந்த பாடு என்றால் பட்ட மரம் எவ்வளவு துடிக்கும் என்று எனக்காய் ஏங்கி ஜீவன் கொடுத்த உம் அன்பு எத்தனை மேலானது
4.வானில் நீர் தோன்றும் நாளொன்று உண்டு அந்நாளில் என் கண்கள் உம்மை காணும் உம்மோடு சேர்த்து என் கண்ணீர் துடைத்து நித்திய மகிழ்ச்சி நீர் தந்திடுவீர்