தேவா உம் பாதம் தேடியே
devaa um paadham thediyae
தேவா உம் பாதம் தேடியே வந்தேன் காவா உம் அன்பதினால்
மூவா உன்னை இப்போது பணிந்தேன் நாடியே தேடியே கூடியே வந்தேன் நான் தேவா
1. பாவத்தில் மாளும் பாவியை மீட்க அன்பு வடிவம் கொண்டீர் இன்பமாக என்னை ஏற்றுக்கொள்ள நீர் தேவியே தேவியே கூவியே வந்தேன் நான் - தேவா
2. அச்சம் பயம் நீங்க அன்போடெனைத் தாங்க அன்பு மயமாய் வந்தீர் வம்பு செய்யும் கொடும் பாதகரைக் காக்க என்னையே உன்னையே தன்னையே கொடுத்தார் - தேவா
3. சிலுவையில் தொங்கிய கிறிஸ்தேசு நாதா உன் அன்பை எவ்விதம் சொல்வேன் தூஷித்த வர்க்கல்லோ நேசித்து ஜெபித்து நீர் நேராயே வாறாயே மாறாயே என்றென்றும் - தேவா
4. சகலமும் தாங்கும் சகலமும் சகிக்கும் அன்பு ஒழிந்துவிடாது பூரண அன்பு பயத்தை நீக்கும் புண்ணியனே உன்னை நண்ணியே வந்தேன் நான் - தேவா
5. சீஷர்களுக்கு நீர் போதித்த அன்பை தாசர்கட்கு ஈயுமே அன்பாலே நாங்கள் ஊழியம் செய்திட கிருபையே தருவாயே அருள்வாயே இப்போது - தேவா