தேவா நீர் எந்தன் சொந்தம்
devaa neer endhan sondham
தேவா நீர் எந்தன் சொந்தம் தேவா நீரே என் தஞ்சம் நீரே என் மீட்பர் நீரே என் கோட்டை நீர் என் கன்மலை
அலைமோதும் வாழ்வில் அலையாமல் செல்ல அநுக்கிரகம் தாருமே நிந்தைகள் நெருக்கம் துன்பங்கள் துயரம் தாங்கிட பெலன் தாருமே
காரிருள் வேளை கலங்கிடும் நேரம் கர்த்தா நீர் என் பக்கமே காரிருளில் தீபம் பாதைக்கு நல் ஒளியாய் என் முன்னே வாருமேன்