தேவா என்தேவா
devaa endhevaa
தேவா-என்தேவா கொல்கொதாமலை நாதா எனக்கார் துணைசொல் அனுகூலா - என் தேவா! மெய்யாய் இதுதருணம் தேவா 2 இச்சிறியோன் முகத்தைப் பாரும் தேவா - என் தேவா!
பாறைக்குள் தேரைபோல் ஆனேன் ' நான்பல துயர் பட்டவனானேன் -2 ஆலைக்குள் கரும்புபோலானேன் இந்த அகதிக்கும் முகங்காட்டும் தேவா - 2
பலரும் பலது சொல்வி ஏய்த்து எனை அலைவாய்த் துரும்பு போலாய்த்து - 2 தொலையாத கவலைக்குள் மாய்த்து எனைத் துரத்தி விட்ட கதியைப் பார்த்து - 2
பெற்றோர் எனைக் கைவிட்டபோதும் பிறவிகள் மறந்திட்ட போதும் -2 மற்றோர்கள் இரங்காத போதும் எனை மறவாத நேசரே நீர் பாரும் - 2
தாகம் மிகுந்த என்னைப் பாரும் நல் அமர்ந்து தண்ணீரண்டை சேரும் - 2 பணமும் விலையுமில்லாமல் நான் பருகிட தாகத்தைத் தீரும் - 2
துங்கா இஸ்ரவேலின் தேவா ஏழை துயர் நீக்கும் மகிமை யேகோவா - 2 மாறாத வாக்குரைத்த தேவா உமை மறக்கவே மாட்டேன் - 2